எமது நோக்கு
''ஒரு வளமான நாட்டிற்கு மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல்''
எமது கொள்கை
அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனுடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் பங்களிப்புடன் பொருத்தமான அபிவிருத்தி செயன்முறையை திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த செயல் திறன் மிக்கதும் பயனுறுதி வாய்ந்ததுமான சேவையினை மக்களுக்கு வழங்கள்.
மஸ்பொத செயலகம் பொதுப் பிரிவு
வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள குடாகல்பொட கோரளை என அழைக்கப்படும் 58.09 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதி மாஸ்பொத்த பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டதாகும். கிழக்கே யக்தெஸ்ஸா மலைத்தொடராலும், மேற்கே மகுரு ஓயா ஆற்றாலும் சூழப்பட்டுள்ள இப்பிரதேசம் 33 கிராம அலுவலர் பிரிவுகளையும், அப்பிரிவுகளில் அமைந்துள்ள 80 கிராமங்களையும் கொண்டுள்ளது. பிரதேச செயலகப் பிரிவின் மொத்த சனத்தொகை 43,674 ஆகும். மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 12,731 ஆகும். சனத்தொகையில் பெரும்பகுதியினர் சிங்கள பௌத்தர்கள் ஆவதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஏனைய இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்கின்றனர்.வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள குடாகல்பொட கோரளை என அழைக்கப்படும் 58.09 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதி மாஸ்பொத்த பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்டதாகும். கிழக்கே யக்தெஸ்ஸா மலைத்தொடராலும், மேற்கே மகுரு ஓயா ஆற்றாலும் சூழப்பட்டுள்ள இப்பிரதேசம் 33 கிராம அலுவலர் பிரிவுகளையும், அப்பிரிவுகளில் அமைந்துள்ள 80 கிராமங்களையும் கொண்டுள்ளது. பிரதேச செயலகப் பிரிவின் மொத்த சனத்தொகை 43,674 ஆகும். மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 12,731 ஆகும். சனத்தொகையில் பெரும்பகுதியினர் சிங்கள பௌத்தர்கள் ஆவதுடன், மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஏனைய இனத்தவர்களும் மதத்தவர்களும் வாழ்கின்றனர்.
மாஸ்பொத்த பிரதேச செயலகப் பிரிவானது இடைநிலை காலநிலைச் சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளதுடன், விவசாயத் துறையை மையமாகக் கொண்ட பொருளாதார அமைப்பைக் கொண்டுள்ளது. இப்பகுதியின் பிரதான பொருளாதாரப் பயிர் தென்னைப் பயர்ச்செய்கை ஆவதுடன், பிரதான விவசாயப் பயிர் நெற்செய்கை ஆகும். சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் மழைநீர் மூலம் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயமாக இருப்பினும், தற்போது அந்நிலைமை மாற்றமடைந்து, அரச மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை நோக்கி அதிகம் ஈர்க்கப்படும் நிலைமை காணப்படுகின்றது.
மாஸ்பொத்த பிரதேச செயலகப் பிரிவு, வடமேல் மாகாணத்தின் தலைநகரமான குருநாகல் நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளமையால், ஏனைய நகர்ப்புற வசதிகளைப் அனுபவித்தல் மற்றும் பிரிவின் மாணவர்களுக்கு பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் வாய்ப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அரை நகர்ப்புறப் பிரதேசமாகக் காணப்பட்ட மாஸ்பொத்த பிரதேச செயலகப் பிரிவில் நடைமுறைபடுத்தப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாக, மிக வேகமாக நகரமயமாவதுடன் இதன் காரணமாக, தனியார்துறை சார்ந்த மற்றும் வணிக நிறுவனங்கள் கணிசமான அளவில் நிறுவப்பட்டு வருகின்றன.
சேவையிலிருந்த பிரதேச செயலாளர்கள
| இல | பெயர் | பதவி | இருந்து | வரை |
| 1 |
திரு. ஆர். ஏ. பீ. பீ. ருபசிங்க |
உதவி பிரதேச செயலாளர் |
10.08.1991 | 30.08.1992 |
| 2 |
திரு. டப்ளியூ. எம். ஜயவர்தன |
உதவி பிரதேச செயலாளர் |
01.09.1992 | 01.08.1996 |
| 3 |
திரு. பீ. பீ. எம். சிறிசேன |
உதவி பிரதேச செயலாளர் |
01.08.1996 | 31.08.1996 |
| 4 |
திரு. ஆர். எல். ஆர். டப்ளியூ. பண்டார |
உதவி பிரதேச செயலாளர் |
01.09.1996 | 01.05.1999 |
| 5 |
திரு. ஆர். ஏ. பீ. டப்ளியூ. எம். ஏ. எஸ். பண்டார |
உதவி பிரதேச செயலாளர் |
01.05.1999 | 14.11.1999 |
| 6 |
திரு. டப்ளியூ. எம். எம். பீ. வீரசேகர |
உதவி பிரதேச செயலாளர் |
15.11.1996 | 07.2002 |
| 7 |
திரு. ஏ. எம். கே. பீ. அதிகாரி |
உதவி பிரதேச செயலாளர் |
08.2002 | 01.2004 |
| 8 |
திரு. பீ. ஏ. கித்சிரி |
உதவி பிரதேச செயலாளர் |
01.2004 | 05.2005 |
| 9 | திரு. எம். டீ. எஸ். பெலிகொல்ல |
உதவி பிரதேச செயலாளர் |
05.2005 | 09.2005 |
| 10 |
கே. டீ. பீ. ஜயசிங்ஹ |
பிரதேச செயலாளர் |
09.2005 | 01.01.2012 |
| 11 |
திருமதி. வீ. கே. பீ. பிலபிட்டிய |
பிரதேச செயலாளர் |
02.01.2012 | 09.04.2014 |
| 12 |
திருமதி. ஆர். எம். ஆர். எம். ரத்நாயக்க |
பிரதேச செயலாளர் | 10.04.2014 | 02.02.2017 |
| 13 | திரு. டப்ளியூ. எஸ். சேனாதிஸ்ஸ |
பிரதேச செயலாளர் |
16.02.2017 | 01.07.2021 |
| 14 |
திருமதி. டபிள்யூ.ஏ.எஸ்.எம்.விதானாராச்சி |
பிரதேச செயலாளர் | 02.07.2021 |














